×
 

நாங்களே ரிசார்ட்ல இருந்துருக்கோம்..! பனையூர் உத்தரவுக்கு விளக்கம் கொடுத்த செங்கோட்டையன்..!!

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பனையூருக்கு வரவேண்டும் என்ற உத்தரவு குறித்து செங்கோட்டையன் விளக்கம் கொடுத்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதியை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஒரு தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார். வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனடியாக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றும், வேறு எங்கும் தங்காமல் நேரடியாக அங்கு வந்துவிட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

சிலர் இதை விமர்சித்த நிலையில், தவெக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் இதற்கு வலுவான பதிலளித்தார். பனையூர் அலுவலகத்தில் வேட்பாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் இந்த உத்தரவை வெளியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான உடன் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பனையூருக்கு வர வேண்டும், எந்த நேரமானாலும் தயக்கமின்றி வந்துவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இது கட்சியின் ஒற்றுமையை உறுதி செய்வதற்கும், தேர்தல் பிந்தைய சூழலில் ஏற்படக்கூடிய எந்தவிதமான அசம்பாவிதங்களையும் தவிர்ப்பதற்கும் உதவும் என்று கட்சி வட்டாரங்கள் விளக்கம் அளித்தன. வெற்றியை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு, தொடர்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கமும் இதில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த உத்தரவுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த செங்கோட்டையன், “எல்லா கட்சியிலும் செய்வதுதான் இது. தவெக மட்டும் செய்யவில்லை. அனைத்து கட்சியிலும் இது தொடர்ந்து நடைபெறும் ஒன்று. நாங்களே ரிசார்ட்ல இருந்திருக்கோமே” என்று கூறினார்.

இதையும் படிங்க: தவெக தியாகத்தால் உருவான இயக்கம்..! மக்கள் தலைவர் விஜய்..! செங்கோட்டையன் பேட்டி..!!

அரசியல் களத்தில் நீண்டகால அனுபவம் கொண்ட அவர், இத்தகைய நடைமுறைகள் அனைத்து பெரிய கட்சிகளிலும் சாதாரணமானவை என்பதை சுட்டிக்காட்டினார். அதிமுகவில் பல தசாப்தங்கள் பணியாற்றிய அவரது பின்னணி, இந்தக் கருத்துக்கு கூடுதல் எடை சேர்த்தது. செங்கோட்டையனின் இந்தப் பதில், தவெகவுக்கு எதிரான விமர்சனங்களை முறியடிக்கும் வகையில் அமைந்தது. பனையூர் அலுவலகம் தவெகவின் மையமாக மாறியுள்ள நிலையில், விஜயின் உத்தரவு கட்சியின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டை வலியுறுத்துவதாகவும், தேர்தல் வெற்றிக்குப் பின் உடனடியான நடவடிக்கைகளைத் திட்டமிடும் வகையிலும் பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: உயிர் உள்ளவரை இயக்கத்திற்காக பாடுபடுவேன்..! பரப்புரையில் செங்கோட்டையன் சூளுரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share