×
 

வெள்ளை அறிக்கையா..? உண்மையை மறைத்த தவெக... பூந்து விளாசிய செந்தில் பாலாஜி..!!

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழக வெற்றிக்கழக அரசு சார்பில் மின்துறையில் கடந்த 25 ஆண்டு கால தகவல்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, புதிதாக 231 துணை மின் நிலையங்கள் அமைக்க நிலங்கள் எடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள் என்றும் அது யார் செய்தது எனவும் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.

தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்த 40 நாட்களில் துணை மின் நிலையங்கள் அமைக்க நிலங்களை கையகப்படுத்தினீர்களா என்று கேட்டுள்ளார். வெளிப்படைத்தன்மையுடன் வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை என்றும் கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தமிழக வெற்றிக்கழக அரசின் வெள்ளை அறிக்கை நிறைய விஷயங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நலிவடைந்த மின்சாரத் துறையை மேம்படுத்த மு.க. ஸ்டாலின் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டார் என்றும் மின்துறையை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கி துறையை காப்பாற்றியவர் ஸ்டாலின் என்றும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் மின் தேவை அதிகரிக்கும் வேலையிலும் சீரான மின்சாரம் கொடுத்தும் என்றும் அதிமுக ஆட்சியில் மின்கட்டணத்தை மூன்று முறை உயர்த்தியும் வருவாய் பற்றாக்குறை 58,000 கோடியாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக ஒன்னும் செய்யலயா..? யாருடைய சாதனை..? செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

ஆனால் திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 34,443 கோடி தான் என்றும் இது அதிமுக ஆட்சி காலத்தை விட 24 ஆயிரம் கோடி ரூபாய் குறைவு என்றும் தெரிவித்தார். ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற போது மின் துறையின் கடன் ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் மின்துறைக்காக வாங்கப்பட்ட கடனுக்காக திமுக ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் 75 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டி உள்ளோம் என்றும் தெரிவித்தார். 

 

இதையும் படிங்க: "செந்தில் பாலாஜி ஒன்னுமே செய்யல"..! வெறும் அறிவிப்புதான்... அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share