×
 

சூடு பிடிக்கும் குதிரை பேரம் விவகாரம்..! முன்ஜாமீன்.? அசோக் குமார் மனு மீது ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

குதிரை வீரன் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு, எதிர்க்கட்சிகளின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஒரு பெரிய குதிரைப் பேரம் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. 

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. இந்த ஆட்சியை கவிழ்க்கும் நோக்குடன் சிலர் தவெக எம்எல்ஏக்களை அணுகி பெரும் தொகைக்கு பேரம் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜா இந்த முயற்சியை எதிர்கொண்டதாகக் கூறி போலீசில் புகார் அளித்தார். அவருக்கு ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும், வாக்கு மாற்றம் செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது. 

புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கைது செய்யப்பட்ட நரேஷ் சென்னையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை நேரடியாக சந்தித்துப் பேசியதாகவும், இந்தப் பேரம் பேசும் திட்டத்துக்கு அசோக் குமார் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே செயல்பட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சதியின் மூளையாக அசோக் குமார் செயல்பட்டதாகவும் காவல்துறை கூறியது. 

இதையும் படிங்க: தவெக-வில் இணைவதில் குதிரை பேரம் இல்லை..' எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி ஓபன் டாக்!

இந்த விவகாரத்தில் அசோக் குமார் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் குதிரை பேரும் பேசியதாக பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அசோக் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வழக்கு விசாரணையை வரும் ஆறாம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

இதையும் படிங்க: தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share