வராத கரெண்டுக்கு "TWO PHASE" விளக்கம்..! அமைச்சரின் ஜெனரேட்டர் கதை... கிண்டலடித்த செந்தில் பாலாஜி..!!
மின் இணைப்பு துண்டிப்பு குறித்து 2 தரப்பிலிருந்து விளக்கம் வருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுரை அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஏற்பட்ட மின்சார தடையைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் பங்கேற்றிருந்தபோதும் மின்சாரம் இல்லாமல் நிகழ்ச்சி நடந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இது குறித்த விளக்கங்களில் மின் துறையின் நிலைப்பாடு குழப்பமாக உள்ளதாகக் கூறியுள்ளார்.
மதுரையில் அரசு சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் கலந்துகொண்டார். ஆனால் விழா நடைபெற்ற இடத்தில் மின்சாரம் இல்லை. மின்சாரம் இல்லாததை விட, அதற்குப் பிறகு வந்த விளக்கங்களில்தான் மின் துறையின் பலவீனம் வெளிப்படுகிறது என்று செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார். விழா ஜெனரேட்டரில் தான் நடந்தது என்றும், அந்த ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என்றும் அமைச்சர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
அதேநேரம் மின்வாரியத்தின் தரப்பில் மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. வராத மின்சாரத்துக்கு விளக்கம் மட்டும் இரண்டு விதமாக வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஜெனரேட்டர்தான் காரணம் என்றால் மின்வாரியம் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மின்வாரியத்தின் விளக்கம் சரியானது என்றால் அமைச்சர் சொன்ன ஜெனரேட்டர் கதை என்ன என்பதையும் அவர் கேட்டுள்ளார். இதற்கிடையில் மின்வாரியத்தின் பதிவு நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!
மின்சாரம் போனதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் மின்வாரியத்தின் பதிவு எப்படி நீக்கப்பட்டது என்பதையாவது கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்று செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் மின் துறையின் நிர்வாகத்தில் உள்ள குழப்பங்களை வெளிப்படுத்துவதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தையே கைப்பிடியில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு இப்படியொரு நிலையா?... மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!