×
 

ஏன் LATE? எதுக்கு உள்ள போனீங்க? விஜய்க்கு செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி…!

பிரச்சார இடத்திற்கு வரும்போது விஜய் வாகனத்தில் உள்ளே சென்றது ஏன் என செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கரூர் திமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.

அரசியல் தலைவர்கள் முன் சீட்டில் அமர்ந்து கை காட்டுவது வழக்கம் என்றும் விஜய் பிரச்சார பகுதிக்கு வந்ததும் வாகனத்தின் முன்பகுதி லைட் அணைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். விஜயிடமே தொண்டர்கள் பலர் தண்ணீர் கேட்ட காட்சிகளை நம்மால் பார்க்க முடிந்ததாகவும், விஜயின் கவனத்தை ஈர்க்க அந்த கட்சி தொண்டர்களே செருப்பை எறிந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

விஜய் பிரச்சார பகுதிக்கு வரும்போது வாகனத்தில் உள்ளே சென்றது ஏன் கூட்டம் நடக்கும் 500 மீட்டருக்கு முன் வாகனத்தில் உள்ளே சென்று விட்டதாக தெரிவித்தார். விஜய் நடத்திய எல்லா கூட்டங்களிலும் தொண்டர்கள் மயக்கம் அடைந்துள்ளதாகவும் காவல்துறை கொடுத்த எந்த அறிவுரையையும் தமிழகவற்றைக் கழகத்தினர் பின்பற்றவில்லை என்றும் கூறினார். விஜய் பேச தொடங்கிய ஆறாவது நிமிடத்தில் தான் செருப்புகள் வீசப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஜய் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி…!

தன்னை பற்றி பேசியபோது செருப்புகள் வீசப்பட்டதாக கூறுவது பொய் என்று விளக்கம் அளித்தார். தவெகவுக்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டம் இல்லை என்றும் கட்டுப்பாடற்ற கூட்டம் எனவும் தெரிவித்தார். ஒரு தவறு நடக்கும் போது சம்பந்தப்பட்ட இயக்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி கூறினார். 

இதையும் படிங்க: உயிர்கள் போயிருக்கு... அரசியலாக்காதீங்க! செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share