"ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!
ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரருக்கு சம்மன் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்தச் சதி ஒரு எம்.எல்.ஏ.வை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல; சுமார் 10 முதல் 15 தவெக எம்.எல்.ஏ.க்களை இலக்காகக் கொண்டு, அவர்களை ஒன்றாக ராஜினாமா செய்ய வைத்து அரசுக்கு பெரும்பான்மை இழக்கச் செய்யும் திட்டம் எனக் கூறப்படுகிறது.
திருநாவுக்கரசு தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முன்பிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தியதாகவும், தேர்தல் பணிகளின் போது ஏற்பட்ட பரிச்சயத்தை இந்த முயற்சிக்கு பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கைரானவர்களிடம் இருந்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அதிர்ந்த அறிவாலயம்... செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு... குதிரை பேர விவகாரத்தில் அதிரடி...!
இந்த நிலையில், ஆட்சிக் அமைப்பு சதி விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கிற்கு போலீஸ் சம்மன் கொடுத்துள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு போலிஸ் சம்மன் கொடுத்திருக்கிறது. செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் 5 நாட்களாக தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தந்தையிடம் சம்மன் கடிதம் வழங்கப்பட்டது.
கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதற்காக திங்கள்கிழமை காலை 10:30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமுறைவாக உள்ள அசோக் குமாரின் முன் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு அழைப்பு சதி விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது.
இதையும் படிங்க: ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!