×
 

விடாத சனி..! அரசாணையை மீறி ஆப்பு வைத்துக் கொண்ட செந்தில் பாலாஜி..!

பொதுத் தேர்வு முடிவுகள் தொடர்பான அரசாணையை செந்தில் பாலாஜி மீறி உள்ளார்.

பொதுத் தேர்வுகளில் முதலிடம், இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவர்களின் விபரங்களை வெளியிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் அரசாணையை மீறி செந்தில் பாலாஜி முதலிடம், இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களின் விவரங்களை பகிர்ந்து உள்ளார். மாநில, மாவட்ட அளவில் முதலிடம், இரண்டாம் இடம் என மாணவர்களின் பெயரோடு செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில வாரியாகவும் மாவட்ட வாரியாகவும் முதலிடம், இரண்டாம் இடம் உள்ளிட்ட இடங்களைப் படித்த மாணவ மாணவிகளை பாராட்டி செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார். ஏற்கனவே பல பிரச்சனைகளில் சிக்கிய செந்தில் பாலாஜி, அரசாணை மீறிய செயலில் ஈடுபட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share