×
 
☰

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

ஜெம் வீரமணி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் உடந்தையாகச் செயல்பட்டதாக அவரது கார் ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன், பாபு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்கில், அவருக்கு உதவியாகவும் உடந்தையாகவும் செயல்பட்ட அவரது தனிப்பட்ட கார் ஓட்டுநர்கள் 3 பேரைச் சிறப்புப் புலனாய்வுக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

 கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களான லாசர், பார்த்திபன் மற்றும் பாபு ஆகிய மூவரிடமும் ரகசிய இடத்தில் வைத்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் 84 வயதான தலைவர் ஆர். வீரமணி, சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட புகார்களின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுப் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 இதனைத் தொடர்ந்து, அவருக்கு உடந்தையாக இருந்து சிறுமிகளை மூளைச்சலவை செய்து அழைத்து வந்ததாக அவரது வீட்டில் பணிபுரிந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான கணேசன் ஆகிய மூவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: ஜெம் வீரமணியிடம் பணம் வாங்கியவர்கள் யார்.? திமுக ஆட்சியில் எவ்வளவு பணம் கைமாறியது.? விசாரணை குழு அமைப்பு..!!

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தற்கொலை மற்றும் 1989-ல் நடைபெற்றதாகக் கூறப்படும் அத்துமீறல்கள் எனப் புதிய புகார்கள் வரிசைகட்டியதைத் தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் உத்தரவின்பேரில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோர் மீது அண்மையில் குண்டர் தடுப்புக் காவல் சட்டமும் பாய்ந்தது.  

 

 

இந்நிலையில், இந்த பாலியல் குற்றப் பின்னணியில் பாதிக்கப்பட்ட சிறுமிகளையும் பெண்களையும் பல்வேறு இடங்களிலிருந்து வீரமணியின் சொகுசு பங்களாக்களுக்கு அழைத்து வருவது, மிரட்டி வாகனங்களில் ஏற்றிச் செல்வது மற்றும் குற்றச் சம்பவங்களுக்கு உடந்தையாக வாகனங்களை இயக்கியது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக வீரமணியின் கார் ஓட்டுநர்களான லாசர், பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இதனையடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனிப்படை போலீசார் இன்று அவர்களைக் கைது செய்து தீவிர புலன்விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். 

  கைது செய்யப்பட்டுள்ள இந்த 3 ஓட்டுநர்களிடமும், வீரமணியின் உத்தரவின் பேரில் எந்தெந்த இடங்களுக்குச் சிறுமிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்?, இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது?, ஆதாரங்களை அழிக்க இவர்கள் உதவினார்களா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் மேலும் பல முக்கிய நபர்கள் சிக்குவார்கள் என்பதால் சென்னைக் காவல் துறையின் விசாரணை உச்சக்கட்ட தீவிரமடைந்துள்ளது.

 

 

 

இதையும் படிங்க: எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share