ஓடும் ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் தொல்லை... பிளேடை வைத்து கிழித்த பயங்கரம்!..
அரக்கோணத்தில் ஓடும் ஆட்டோவில் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சமீபகாலமாக பொது வெளியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி வருகின்றன. பள்ளிகள், கல்வி நிலையங்கள் என்று பாதுகாப்பான இடங்களாகக் கருதப்படும் இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது, சமூகத்தின் அடிப்படை மதிப்புகளையும் பாதுகாப்பு உணர்வையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
தமிழக அரசு இத்தகைய குற்றங்களைத் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2013 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது ராணிப்பேட்டையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஐடி பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்... வழக்கறிஞரை தட்டி தூக்கிய போலீஸ்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் பயணித்துள்ளார். ஓடும் ஆட்டோவில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. தன்னை வன்புணர்வு செய்ய நினைத்த மர்ம நபரிடம் இருந்து தப்பிக்க மாணவி முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த பிளேடை வைத்து மாணவியின் உடலை கிழித்து அந்த நபர் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆட்டோவில் இருந்து குதித்து அந்த மாணவி தப்பித்துள்ளார். நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதையும் படிங்க: நாடு நாசமா போச்சு..1ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!