×
 

ச்சீ… மனுஷங்களா நீங்க? கணவன் கண்ணெதிரே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்…!

நெல்லை அருகே வேலைக்குச் செல்ல மறுத்ததால் கணவரின் கண் எதிரே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை அருகே கணவனின் கண்ணெதிரே ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. வேறு வேலைக்குச் செல்ல முயன்றதால் குவாரி உரிமையாளர் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர் குளம் பகுதியில் தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அதான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி வேலைக்கு சேர்ந்துள்ளனர். திருநெல்வேலியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது மஹ்புல் ஹுசைன் என்பவர் அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு அந்த தம்பதியை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளதாக தெரிகிறது.

போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பதாலும் சம்பளம் போதவில்லை என்பதாலும் வேலையிலிருந்து அந்த தம்பதி விலகுவதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இருவரும் கேரள மாநிலத்திற்கு வேலைக்கு செல்ல முடிவு செய்த நிலையில் அரசர் குளத்திலிருந்து ஆட்டோவில் இருவரும் திருநெல்வேலிக்கு பயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த தம்பதியை அழைத்த உசைன் அங்கேயே வேலை செய்ய வேண்டும் என்று மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக பேச வேண்டும் என்று கூறிய அவர் பைக்கில் இரண்டு சிறார்களுடன் சிவந்திப்பட்டி பகுதியில் நின்று உள்ளார்.

இதையும் படிங்க: நெஞ்சே பதறுதே..!! வக்கிரத்தின் உச்சம்...  அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பி... 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...! 

ஆட்டோ அந்த பகுதிக்கு சென்றதும் கல்பாறையில் இருந்து அந்த தம்பதி பணத்தை திருடி விட்டதாக டிரைவர் இடம் கூறி இருவரையும் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவரை தாக்கிய உசைன் உட்பட மூன்று பேரும் அவரின் கண் எதிரிலேயே அவரது மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பல மணி நேரத்திற்கு பிறகு இரண்டு பேரையும் சாலைப் பகுதியில் விட்டுவிட்டு மூன்று பேரும் தப்பி ஓடி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பின் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய முகமது மஹ்புல் ஹுசைன் மற்றும் இரண்டு சிறார்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: “என் மகளை மாதிரியே இருக்கம்மா” - ஆம்னி பேருந்தில் மயக்க பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை... சீரழித்த ஓட்டுநர் கைது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share