மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை... தவெக நிர்வாகி மீது முன்னாள் பெண் நிர்வாகி பரப்பு குற்றச்சாட்டு...!
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பாலியல் தொடர்பான புகார்கள் எழுப்பப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி இசக்கி கமலா என்பவர்ஏற்கனவே தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தினர் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தமிழக வெற்றி கழக மாவட்ட துணைச் செயலாளர் சுடலை என்பவர் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மிரட்டி வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவத்தால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி கமலா தமிழக வெற்றி கழகத்தில் ஒன்றிய துணைச் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இரண்டு பேர் தன்னை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சிறுவைகுண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பாலா உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இசக்கி கமலா அவர்களுக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றி கழக எம்எல்ஏ விஜி சரவணன் செயல்பட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த இசக்கி கமலா தான் தமிழக வெற்றி கழக மாவட்ட துணைச் செயலாளர் வாத்து சுடலை என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்வதால் பணம் வாங்கி இருந்ததாகவும், மேலும் கிராம மக்கள் சிலருக்கு பணம் வாங்கி கொடுத்ததாகவும் ஆனால் தான் உள்பட அனைவரும் பணத்தை அவருக்கு வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டேன். தற்போது வாத்து சுடலை தன்னிடம் பணத்தைக் கேட்டு மிரட்டுவதாகவும் வீட்டிற்கு வந்து ஆபாச வார்த்தைகளால் பேசி வருவதாகவும், மேலும் தனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு அளிக்கும் வகையில் மிரட்டல் விடுத்து வருவதாகவும் புகார் அளித்துள்ளார். எனவே வாத்து சுடலை மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!
தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தினர் தனக்கு இவ்வாறு தொந்தரவு அளித்து வருவதாகவும் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் மனு அளித்துள்ளேன். எனவே தமிழக முதல்வர் விஜய் அண்ணா அவர்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பாலியல் தொடர்பான புகார்கள் எழுப்பப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: தமிழகத்தில் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை! அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!