பல பேருடன் திருமணம்... ஸ்பாவில் பாலியல் தொழில்... யூடியூபர் மதுமிதாவின் ஷாக்கிங் பின்புலம்... களத்தில் இறங்கிய போலீஸ்...!
YouTuber மதுமிதா பின்புலம் குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலிஸார் ரகசிய விசாரனை.
குமரி மாவட்டத்தில் பிரபல Youtuber மதுமிதா வீட்டில் நடைப்பெற்ற கொள்ளையில் தொடர்புடையவர்களை காவல் துறை கைது செய்த நிலையில் தனக்கு பெற்றோர்கள் இல்லை தான் கோவையை சேர்ந்தவர் என மதுமிதா கூறிய நிலையில் அவைகள் உண்மை இல்லை என கூறப்படுகிறது.
அதாவது அவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் குமாரபுரம் அருகே கிருஷ்ணாபுரம் என்பதும் அவரது தாய் தங்கம் வில்லிசை கலைஞர் என்றும் அவர் தந்தை செங்கல்சூளை தொழில் செய்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு தனது தந்தையின் சகோதரர் மகனும் தனக்கு அண்ணன் முறை வருபவரை (ராஜேஷ்) காதலித்து வீட்டிற்கு தெரியாமல் பல்லடத்தில் சென்று குடும்பம் நடத்தி வந்ததாகவும் பின்னர் அவரை பிரிந்து பல திருமணங்கள் செய்த நிலையில் தற்பொழுது தென்காசியை சேர்ந்த நபரை திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பணத்தில் குளித்து சவால்விட்ட மதுமிதா... சத்தமே இல்லாமல் தூக்கிய இசக்கி பாண்டி... 118 சவரன் நகை திருட்டில் ‘திடுக்’ திருப்பம்...!
இதைப்போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோயில் ஒழுகினசேரி பகுதியில் தனியார் விடுதியில் சட்ட விரோதமாக செயல்பட்ட ஸ்பாவில் பாலியல் தொழில் செய்ததாக வடசேரி காவல் துறையால் பிடிக்கப்பட்டு பெண்கள் காப்பகத்தில் நன்னடத்தைக்காக அடைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றம் மூலமாக நிபந்தையுடன் வெளியே விடப்பட்டார்.
இவ்வாறு இருக்கையில் இவர் தனது சொந்த ஊர் தாய், தந்தை குறித்தும் தனது கடந்த காலத்தில் உள்ளவைகளை ஏன் மறைத்தார் எனவும் இவர் கோவையில் என்ன செய்து கொண்டு இருந்தார் எனவும், இவருக்கு இவ்வளவு நகைகள் பணம் எவ்வாறு வந்தது என்றும், இவைகளுக்கு முறையான கணக்கு இருக்கிறதா என்றும், இவருக்கும் குமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள முக்கிய நபர்களுக்கு தொடர்பு குறித்தும், அப்பாவி பெண்களை ஆசை வார்த்தை கூறி ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தினாரா எனவும், ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலிஸார் ரகசிய விசாரனை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரனைக்கு பிறகே முழுமையான உண்மைகள் வெளி வரும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: யூடியூபர் மதுமிதா வீட்டில் கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்... விடிந்ததுமே தட்டித்தூக்கிய போலீஸ்...!