×
 

வெளியானது கேரளா உட்பட 4 மாநில வரைவு வாக்காளர் பட்டியல்!! மொத்தம் 95 லட்சம் பேர் நீக்கம்!

எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், கேரளா மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை துல்லியமாக்கும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் இப்பணிகள் நடைபெற்றன.

கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கிய இந்த தீவிர திருத்தப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 23-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த வரைவு பட்டியலில் கிட்டத்தட்ட 95 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணங்களாக இறந்தவர்கள், இடமாறியவர்கள், தொடர்பு இல்லாதவர்கள் மற்றும் பல இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 20 லட்சம் வாக்காளர்கள் எங்கே? SIR விவகாரம்!! திணறும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள்!

விவரங்கள் பின்வருமாறு:

  • அந்தமான் நிக்கோபார் தீவுகள்: மொத்தம் 3.10 லட்சம் வாக்காளர்களில் சுமார் 64 ஆயிரம் பேரின் பெயர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறவில்லை.
  • கேரளா: 2.78 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில் 24.08 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
  • சத்தீஸ்கர்: 2.12 கோடி வாக்காளர்களில் 27.34 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கம்.
  • மத்தியப் பிரதேசம்: 5.74 கோடி வாக்காளர்களில் 42.74 லட்சம் பேரின் பெயர்கள் வரைவு பட்டியலில் இல்லை.

இந்த வரைவு பட்டியலை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் சரிபார்க்கலாம். பெயர் நீக்கப்பட்டவர்கள் அல்லது திருத்தம் தேவைப்படுபவர்கள் ஜனவரி 22-ம் தேதி வரை முறையீடு செய்யலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்.

இத்திருத்தப் பணிகள் வாக்காளர் பட்டியலை துல்லியமாக்கி, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையும் படிங்க: அம்மாடியோவ்!! திமுகவின் அசூர பலம்! பூத் ஏஜெண்டுகள் தயார்! தேர்தல் கமிஷன் அதிரடி அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share