சம்பளம் வேணுமா? இந்தா வாங்கிக்கோ... ஊழியர்களை பெல்டில் விளாசிய முதலாளி..!
மீரட்டில் ஊழியர்களை அறையில் அடைத்து வைத்து உரிமையாளர் பெல்லட்டால் விளாசும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததைக் கேட்டதற்காக, கோழி வியாபாரி ஒருவர் தனது இரண்டு ஊழியர்களை கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஊதியம் கேட்ட ஊழியர்களை உரிமையாளர் பெல்ட்டால் விளாசும் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நரேந்திர பிரதாப் என்பவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவை இதுவரை 86,000க்கும் அதிகமான நெட்டிசன்கள் பார்த்துள்ளதோடு, உரிமையாளரின் செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
மீரட்டைச் சேர்ந்த ஷான் குரேஷி என்ற கோழி வியாபாரி தனது ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனைக் கேட்டு 2 தொழிலாளர்கள் அவரது அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது கோழியை திருடியதாக இருவர் மீதும் பழி சுமத்திய அவர், தனது இரண்டு தொழிலாளர்களை பெல்ட்டால் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: #ViralVideo சீறிப்பாய்ந்த சிங்கப்பெண்... ஆம்புலன்ஸுக்குள் போராடிய நோயாளி உயிரைக் காக்க பெண் காவலர் செய்த காரியம்...!
தொழிலாளர்கள் இருவரையும் ஷான் பெல்ட்டால் அடிக்கும் போது அந்த அறையில் அதனை பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ தவிர, யாரும் ஷானை தடுக்கவோ, தொழிலாளர்களை காப்பாற்றவோ முயற்சிக்காததைக் கண்டு நெட்டிசன்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். ஏராளமான சோசியல் மீடியா பயனர்கள் இந்த வீடியோவை உத்தரபிரதேச காவல்துறை மற்றும் மீரட் காவல்துறையின் சமூக ஊடகக் கணக்குகள், சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனாடியாக கைது செய்ய வலியுறுத்தியும் டேக் செய்து வருகின்றனர்.
#मेरठ के "मुर्गा कारोबारी" शान कुरैशी ने अपने दो मुलाजिमों की बेल्ट से बेरहमी से पिटाई की है
— Narendra Pratap (@hindipatrakar) August 11, 2025
मुलाजिमो ने 3 महीने की बकाया सैलरी मांगी थी. शान कुरैशी ने उन पर मुर्गा चोरी के आरोप लगाए और उन्हें बंधक बनाकर पीटा pic.twitter.com/K6gHrweHAQ
இதையும் படிங்க: கொங்கு மண்டல மக்களுக்கு விரைவில் வருகிறது குட்நியூஸ்... மத்திய அரசு சீக்ரெட்டை உடைத்த அண்ணாமலை...!