×
 
☰

உதவி ஆய்வாளருக்கு ஸ்கெட்ச்..! போட்டுத் தள்ள பிளான்..! ரவுடி அதிரடி அரெஸ்ட்..!!

குமரியில் உதவி காவல் ஆய்வாளரை கொலை செய்ய முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது அரிவாள் வீசி கொலை செய்ய முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் ஏட்டு கோபகுமார் ஆகியோர் கோட்டையடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சாமிதோப்பு அருகே உள்ள சாஸ்தான் கோவில் விளையைச் சேர்ந்த ரவுடி அஜய்சாரதி (வயது 25), போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றுள்ளார்.

உன்னை விசாரிக்க வேண்டும் ஓடாதே என போலீசார் கூறியுள்ளனர்.அதற்கு அஜய்சாரதி போலீசாரை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து உதவி ஆய்வாளர் சுரேஷின் கழுத்தை நோக்கி வீசி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதில் சுதாரித்து கொண்ட உதவி ஆய்வாளர் தலையை குனிந்து சஅரிவாள் வெட்டிலிருந்து தப்பியுள்ளார். இதையடுத்து சக போலீசார் ரவுடி அஜய்சாரதியை உடனடியாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இதையும் படிங்க: தலைநகரை குலை நடுக்கவிட்ட ‘கொலைகள்’... விடிய விடிய வேட்டையாடிய காவல்துறை... கொத்து, கொத்தாய் சிக்கிய ரவுடிகள்...!

அவர் மீது ரோந்து சென்ற போலீசாரை தகாத வார்த்தைகள் பேசி தாக்கி கொலை செய்ய முயன்றது, அரசுப் பணியைச் செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட அஜய் சாரதி மீது தென்தாமரைகுளம் மற்றும் சுசீந்திரம் காவல் நிலையங்களில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இன்ஸ்டா காதல்... +2 மாணவி வன்கொடுமை.! 4 பேர் போக்சோவில் அரெஸ்ட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share