கட்டாய கையெழுத்து! பிஜேபி நிர்வாகிகள் 5 பேர் அதிரடி அரெஸ்ட்...
பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்மொழி கொள்கைக்கு ஒப்புதல் கொடுத்தால்தான் தமிழகத்திற்கு உரிய நிதியை விடுவிக்க முடியும் என மத்திய அரசு கூறிவிட்டது. ஆனால் 2 மொழி கொள்கையே தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிப்பட கூறியுள்ளார். மேலும் மும்மொழி கொள்கையை பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்த்து வருகின்றனர்.
இதனிடையே முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று கையெழுத்து இயக்கத்தை நடத்த முற்பட்டார்.இந்த நிலையில், சென்னை ஓ.எம்.ஆரில் பாஜகவினர் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். அப்போது பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்திட வைத்துள்ளனர். வாடா தம்பி வந்து, சைன் போடு... என அழைத்து கையெழுத்திட வைத்து பிஸ்கட் கொடுத்து அனுப்பியுள்ளனர். பல மாணவர்கள் கையெழுத்திட முன் வராத நிலையில் வலுக்கட்டாயமாக இழுத்து கையெழுத்திட கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்... சொல் பேச்சு கேட்க மாட்டீர்களா என நீதிமன்றம் ஆவேசம்..!
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல குழு சார்பில் அளித்த புகாரின் பேரில், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, நிகழ்சி ஏற்பட்டாளர் பாஜக கவுன்சிலர் சுந்தரம், முன்னாள் மண்டல தலைவர் மோகன் குமார், சென்னை கிழக்கு மாவட்டம் முன்னாள் மாவட்ட செயலாளர் கோட்டீஷ்வரன், முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பரசு ஆகியோர் 4 பிரிவுகளின் கீழ் கண்ணகி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு குவிந்த பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் செம்மஞ்சேரி உதவி ஆணையாளர் வைஷ்ணவி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெளியேற்றினார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: தமிழக அரசு உடனான மோதல் தணிந்ததா..? ஆளுநர் காட்டிய கிரீன் சிக்னல்..!