×
 

பிரத்யேக ஜீப், சிறப்பு சீருடை... கம்பீர நடையுடன் சிங்கப்பெண் படை திட்டம்..! நாளை அறிமுகம்..!!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் நாளை தொடங்க இருக்கிறது.

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நாளை மாலை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு தொடங்கவிருக்கும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு படை, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதலமைச்சர் விஜய் பதவி ஏற்றவுடன் தனது முதல் கையெழுத்தாக இந்த திட்டத்திற்கான அரசாணையில் கையொப்பமிட்டார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மையாகக் கொண்டு இயங்கும் இந்தப் படை, மாநிலம் முழுவதும் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது. ஐ.ஜி. பதவியில் ஒரு உயர் அதிகாரி தலைமையில், ஒரு எஸ்.பி., இரண்டு டி.எஸ்.பி.க்கள், நான்கு இன்ஸ்பெக்டர்கள், எட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 20 காவலர்கள் உள்ளிட்ட 36 பதவிகளுடன் இந்தப் படை செயல்படும். 

இந்த அதிரடிப்படைக்கென புதிய வகை ஜீப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பிரத்யேக சீருடை, அதிநவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்தப் படை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும். சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு பணிகளையும் முன்னெடுக்கும். 

இதையும் படிங்க: கமாண்டோ ஸ்டைலில் கலக்கும் சிங்கப்பெண் படை... வைரலாகும் புதிய லுக்..!

இந்தப் படைக்கென உருவாக்கப்பட்டுள்ள சின்னத்தில் ஒரு பக்கம் துணிவான பெண் போலீஸ் அதிகாரி மற்றும் மற்றொரு பக்கம் கம்பீரமாக நிற்கும் சிங்கம் இடம்பெற்றுள்ளது. இது பெண்களின் வலிமை மற்றும் பாதுகாப்பின் சின்னமாகக் கருதப்படுகிறது. படையினரின் இருப்பை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.

இதையும் படிங்க: நீட் தேர்வு.. களமிறங்கும் விமானப்படை! ஜூன் 21-ல் நடக்கிறது மறுதேர்வு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share