×
 

வலுக்கும் எதிர்ப்பு... கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம்... SIR - க்கு எதிராக கண்டன முழக்கம்...!

எஸ் ஐ ஆர் பணிகளை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் எஸ்ஐஆர் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சி... SIR- க்கு வலுக்கும் எதிர்ப்பு...! சீமான் அறிவிப்பு...!

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிர திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கொட்டும் மழையிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

இதையும் படிங்க: தமிழ், தமிழர் களத்தில் தீயாய் செயல்பட்டவர்... மறைந்த இயக்குனர் வி. சேகருக்கு சீமான் புகழ் வணக்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share