S.I.R. பணிகளில் குளறுபடி... இப்படியா பண்ணுவீங்க? ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வாக்காளர்கள்...!
எஸ் ஐ ஆர் பணிகளில் குளறுபடிகள் நடப்பதாக வாக்காளர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் அவசர அவசரமாக வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருத்தப்படுவதில் குளறுபடிகள் நடப்பதாக வாக்காளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: “நாங்க மட சாம்பிராணியா இருக்கோம்...” - மதுரை எஸ்.ஐ.ஆர். பணிகளில் குளறுபடி... செல்லூர் ராஜூ ஆவேசம்...!
தாம்பரத்தில் SIR படிவத்தை பதிவேற்றம் செய்யும்போது, முதல் 5 டிஜிட் போன் நம்பரில் பாதியையும் மீதி 5 டிஜிட் ஆதார் நம்பரில் பாதியையும் இணைத்து போன் நம்பர் என குறிப்பிடப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாக இதுபோன்ற குளறுபடிகள் நடப்பதாக சம்பந்தப்பட்ட வாக்காளர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எந்த வாக்காளரையும் காரணம் இல்லாமல் நீக்க முடியாது... புரிஞ்சுக்கோங்க..! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்...!