#BREAKING: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…!
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது..
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்திற்கான திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தத்திற்கு முன்பாக 32 லட்சத்து 25 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் திருத்தத்திற்கு பிறகாக 25 லட்சத்து 74 ஆயிரத்து 608 வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆறு லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் சேலம் மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 68 ஆயிரமாக இருந்தது இந்த நிலையில் எஸ் ஐ ஆர் பணிகளுக்கு பிறகாக 3 லட்சத்து 5 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 706 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருத்த பணிகளுக்கு முன்பாக 14 லட்சத்து 66 ஆயிரத்து 660 வாக்காளர்கள் இருந்துள்ளனர். எஸ் ஐ ஆர் பணிக்கு பிறகு 12 லட்சத்து 72, 954 வாக்காளர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தான் அமையணும்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஒன் டூ ஒன் ஆலோசனை...!
நெல்லை மாவட்டத்தில் 2 லட்சத்து 16 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 79 ஆயிரத்து 690 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்து 98 ஆயிரத்து 362 வாக்காளர்கள் இருந்த நிலையில் 8 லட்சத்து 18, 672 வாக்காளர்கள் தற்போது இருக்கின்றனர். திருச்சி மாவட்டத்தில் 3,31,000 பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 23 லட்சத்து 68 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் முன்பு இருந்த நிலையில் தற்போது 20 லட்சத்து 37 ஆயிரம் பேர் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: அளப்பரிய ஆதரவு… எவ்வளவு நன்றி சொன்னாலும்… விஜய் உருக்கம்…!