உச்சக்கட்ட பதற்றத்தில் சிவகங்கை... களத்தில் இறங்கிய சைபர் க்ரைம்... தென் மண்டல ஐ.ஜி. விடுத்த எச்சரிக்கை...!
342 வழக்குகள் பதிவு; 193 பேர் கைது; 519 பதிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல காவல்துறைத் தலைவர் ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி ஐ.பி.எஸ். தகவல்
சிவகங்கையில் கடந்த 5 நாட்களில் 44 சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம் – 18 கணக்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு.
சமூக வலைதளங்களில் குற்றச் செயல்களைத் தூண்டும் வகையிலான பதிவுகள் மற்றும் சட்டவிரோத ஆன்லைன் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்படும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, 2026ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘டிஜிட்டல் விஜில்’ (Operation Digital Vigil) நடவடிக்கையின் கீழ், அக்டோபர் 22ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தென்மண்டலத்தில் உள்ள பத்து மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சமூக வலைதளக் குற்றங்களுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, சமூக வலைதளங்களில் சட்டவிரோதச் செயல்கள் தொடர்பாக மொத்தம் 342 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்மேலும், 519 சமூக வலைதளப் பதிவுகள் முடக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தொடரும் வேட்டை..! சிவகங்கை ரவுடி கொலை விவகாரம்.. மேலும் 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!
சிவகங்கை மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் சட்டவிரோதச் செயல்கள் தொடர்பாகக் கடந்த ஐந்து நாட்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஐந்து நாட்களில் 44 சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், 18 சமூக வலைதளக் கணக்குகள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது
சமூக வலைதளங்களில் சட்டவிரோதமான உள்ளடக்கங்களைப் பகிர்வோர் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக வழக்குகள் பதிவு
2026ஆம் ஆண்டில் அக்டோபர் 22ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள்:
தூத்துக்குடி மாவட்டத்தில் 59 வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் 57 வழக்குகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 50 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் சட்டவிரோதமான உள்ளடக்கங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றின் தன்மைக்கு ஏற்ப குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மாவட்ட காவல்துறைப் பிரிவுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.மேலும், சட்டவிரோதமான பதிவுகளை முடக்குவது அல்லது நீக்குவது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களுடன் காவல்துறையினர் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக தனிநபர்களைக் குற்றவியல் ரீதியாக மிரட்டும் வகையில் பதிவுகளை வெளியிடுதல்.
போதைப்பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பதிவுகளைப் பகிர்தல்,
சட்டவிரோத ஆயுதங்களைக் காட்சிப்படுத்துதல், சட்டவிரோதச் செயல்களைத் தூண்டும் வகையில் உள்ளடக்கங்களை வெளியிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும், சட்டவிரோதமான பதிவுகளை வெளியிடுவோர் மற்றும் பகிர்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: சிவகங்கை ரவுடி கொலை வழக்கு.. "பழிக்கு பழி"..! முக்கிய குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!