ஐயோ இப்படியா உயிர் போகணும்... சிவகாசியில் கேட் விழுந்து 2 சிறுமிகள் துடிதுடித்து உயிரிழப்பு...!
சிவகாசி அருகே வீட்டின் கேட் விழுந்த விபத்தில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் கொங்கலாபுரத்தில் வீட்டின் கேட்டு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு சிறுமிகள் பலியாகி உள்ளனர். சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிறுமிகளை பெற்றோர் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உலுக்கியது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. இப்படியுமா மரணம் வரும் என்று வசிக்கத் தோன்றும் அளவுக்கு சிறுமிகள் துடித்து துடித்து இந்த சம்பவத்தால் உயிரிழந்து உள்ளது கலங்கச் செய்கிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தைச் சேர்ந்த சிறுமிகள் கமலிகா மற்றும் ரிஷிகா. ஒன்பது வயதான கமலிகாவும், நான்கு வயதான ரிஷிகாவும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.
வீட்டின் கேட்டில் இரண்டு சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்த சூழலில் கேட்டுடன் சேர்ந்து சுவர் இடிந்து விழுந்து உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கேட்டுடன் கூடிய சுவர் இடிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் இரண்டு சிறுமிகளும் உயிரிழந்து உள்ளனர். ராஜாமணி என்பவரின் வீட்டின் கேட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தவெக-வுடன் கூட்டணியா? "விஜய் பேசுவது யாரோ தூண்டப்பட்ட பேச்சு" - திருமாவளவன் விமர்சனம்
இந்த எதிர்பாராத விபத்தில் பெண் காவலரின் மகளும் அவரது உறவினர் மகளும் இறந்துள்ளனர். சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் பெண் காவலரும் உறவினர்களும் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.
இதையும் படிங்க: சிரியாவில் குண்டுவெடிப்பு..!! 8 பேர் பரிதாப பலி..!! தொழுகையின்போது நேர்ந்த சோகம்..!!