×
 

ஜனநாயகன் பாட்டு, விசில் சத்தத்துடன் மாஸாக என்ட்ரி கொடுத்த கே.டி.ஆர்... அதிமுக நிகழ்ச்சியில் கலகல...!

ஜனநாயகன் திரைப்படப் பாடலுடன், விசிலடித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சிவகாசியில் இளைஞர்கள்- இளம்பெண்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜனநாயகன் திரைப்படப் பாடலுடன், விசிலடித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

 சிவகாசி மாநகராட்சிக்கு ட்பட்ட திருத்தங் கல்லில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம்பெண்களும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்கின்ற  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சி நடந்த தனியார் திருமண மண்டபத்திற்குள்ளாக வருகை தந்த போதும், நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மண்டபத்திலிருந்து வெளியேறிய  போதும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படப் பாடல் பின்னணியில் ஒ லிக்கப்பட்டு, அவரது கட்சியின் சின்னமான விசிலிலி வெளிவரும் ஒலி சப்தம் போன்று    காதுகளைப் பிளந்து செவிடாக்கும் விதமாக இளைஞர்கள் உற்சாகத்தோடு தொடர்ந்து விசில டித்தபடியே இருந்தனர். 

 நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது :- அதிமுகவில் இணைய வந்திருந்த படித்த பட்டதாரி இளைஞர்களையும், பெண்களையும் வரவேற்று அதிமுக தான் நம்பி வந்தவர்களை வளர்த்து விடுகின்ற இயக்கம். எடப்பாடி பழனிச்சாமி இளைஞர்களை ஊக்குவித்து பதவியளித்து உற்சாகப்படுத்தக் கூடியவர். அதிமுகவை நம்பி வருபவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்போம். அதிமுக இளைஞர்களை க்கைவிட்டதாக வரலாறு கிடையாது. என்றார்.

இதையும் படிங்க: “பொதுக்கூட்டம் இல்ல, விஜய் கிளாமரைக் காட்டும் கூட்டம்”... தவெகவை ஒரே போடாய் போட்ட பொள்ளாச்சி ஜெயராமன்...! 

 முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிக் கொண்டிருந்த  போதே, நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த இளைஞர்கள் பலர் உற்சாக மிகுதியால் அவரை பேச விடாமல் பேச்சை நிறுத்தி நிறுத்திப் பேசுகின்ற  வகையில் தொடர்ந்து சப்தமிட்டபடி விசில்டித்துக் கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: திமுகவுக்கு மட்டும் தெரிஞ்சிடவே கூடாது... விஜய் கைக்கு போன முக்கிய ரிப்போர்ட்... பரபரக்கும் அரசியல் களம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share