×
 

சிக்கியது முக்கிய ஆவணங்கள்... சிக்கலில் சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள்... ஐ.டி. சோதனையில் அதிரடி திருப்பம்...!

சோதனையில்  கட்டுக்கட்டாக பல்வேறு ஆவணங்கள் மற்றும் போலியான பில்களுடன், ஹவாலா பணமும்  சிக்கியதாகத் தகவல்.

சிவகாசி- பட்டாசு உற்பத்தியாளர்களின் தலைமை அலுவலகங்கள், வீடுகள் மற்றும் லாரி செட் டிரான்ஸ்போர்ட்  நிறுவனங்களிலும்  வருமான வரித்துறையினரின் 3- நாட்கள்  அதிரடி சோதனை இன்று அதிகாலையுடன் நிறைவு. சோதனையில்  கட்டுக்கட்டாக பல்வேறு ஆவணங்கள் மற்றும் போலியான பில்களுடன், ஹவாலா பணமும்  சிக்கியதாகத் தகவல்.

 சிவகாசியில் பிரபல பட்டாசுத் தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகங்கள், பட்டாசு தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் லாரி செட் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 11-ம் தேதி திங்கட்கிழமை காலையிலிருந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  

சிவகாசியிலிருந்து வருடம் தோறும் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான பட்டாசுகள் லாரி செட் டிரான்ஸ்போர்ட்  நிறுவனங்கள் மூலமாக நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனையாகிறது. இதில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு  வரி எய்ப்பு  தொடர்கதையாக நடப்பதாக வருமான வரித்துறை மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்தது.

இதையும் படிங்க: #BREAKING நள்ளிரவில் குண்டுக்கட்டாக கைது... தூய்மை பணியாளர்களை தனி இடத்தில் அடைத்து வைத்து மிரட்டல்...தற்போதைய நிலவரம் என்ன?

அதனடிப்படையில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை உயரதிகாரிகளும், அலுவலர்களும் சிவகாசியில் முகாமிட்டு 3- தினங்களாக பகல் வேளைகளிலும், இரவு நேரங்களிலும் விடிய- விடிய அலுவலகங்களின் பல்வேறு பகுதிகள், வீடுகளின் தோட்டங்கள், நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

11-ம் தேதி திங்கட்கிழமை, 12-ம் தேதி  செவ்வாய்க்கிழமை, 13-ம் தேதி புதன்கிழமை என மூன்று நாட்கள் வருமான வரித் துறையினர்களால்  தொடர்ந்து நடைபெற்ற சோதனை இன்று அதிகாலையில் நிறைவு பெற்றது. அலுவலகங்கள் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் வரி ஏய்ப்பு சம்பந்தமான ஆவணங்களுடன், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கட்டுக் கட்டாக சிக்கியுள்ளதாகவும், லாரி செட் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் ஏராளமான போலி பில்களுடன், ஹவாலா பணமும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ள ள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: ஃபேஸ்புக்கில் மார்ப்பிங் போட்டோ... புதுக்கோட்டை இளைஞனால் பதறிய கோவை பெண்... அதிரடி காட்டிய போலீஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share