×
 

ஆணவக் கொலை அல்ல..! இளம்பெண் உயிரிழப்பு விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

நெல்லை மாவட்டத்தில் இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தை திடீர் திருப்பமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பேட்டை பகுதியைச் சேர்ந்த சிவமதி என்ற 19 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஆணவப் படுகொலை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவமதி திருநெல்வேலி மாவட்டத்தின் பேட்டைப்புலி பகுதியைச் சேர்ந்தவர். அவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்பட்டிருக்கிறது. அவரது குடும்பத்தினர் இந்தக் காதலை ஏற்க மறுத்து, திருமண ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில், திடீரென சிவமதி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அவரது உடல் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடைத்தது. இதனால் ஆணவப் படுகொலை என்று குற்றம் சாட்டினர்.

காதல் தொடர்பான எதிர்ப்பு காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சம்பவம் நடந்த பிறகு, உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. சிவமதியின் மரணம் குறித்து உரிய விசாரணைக்கு கோரிக்கை விடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவமதி ஆணவ படுகொலை செய்யப்படவில்லை என்றும் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ஆணவப் படுகொலை? இளம்பெண் மர்ம மரணம்... பெற்றோர் மீது காதலன் குற்றச்சாட்டு...!

சிவமதியின் உடற்கூறாய்வு முடிந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவமதியின் காதலர் பெற்றோர் அந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்திய போது தான் அலைபேசி அழைப்பில் தான் இருந்ததாகவும் இது ஆணவ படுகொலை என்றும் குற்றம் சாட்டை இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: ஒரே இடத்தில் 20 கல்குவாரிகள்..! பாழாகும் இயற்கை..! அதிர்ச்சியூட்டும் காட்சிகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share