நீங்கா நினைவில்..!! மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை... தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!
மறைந்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. மதுரையில் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் செப்டம்பர் 11ஆம் தேதி மதியம் காலமானார். அவருக்கு வயது தொண்ணூறு. மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் வந்து மரியாதை செலுத்தினர்.
பல்வேறு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.சாலமன் பாப்பையா 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் எளிய குடும்பத்தில் பிறந்தார். வறுமையை வென்று படித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றினார். தமிழ் இலக்கியத்தை பாமர மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவரது பங்கு முக்கியமானது. பட்டிமன்ற நடுவராக ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தினார்.
எளிய மொழியில் ஆழமான கருத்துகளை சொல்லி மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். தொலைக்காட்சி வழியாக பட்டிமன்றங்களை வீடுகளுக்குள் கொண்டு வந்தவர் அவர். திருக்குறள் உள்ளிட்ட நூல்களுக்கு உரை எழுதினார். பல நூல்களை இயற்றினார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.அவரது மறைவுக்குப் பின்னர் மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழுக்காக வாழ்ந்த அவரது இழப்பு பெரியது என்று குறிப்பிட்டார். முதல்வரின் உத்தரவின்படி அரசு சார்பில் வந்ததாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாலமன் பாப்பையா புகழ் என்றும் நிலைத்திருக்கும்! மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
இறுதிச் சடங்கில் அரசு மரியாதை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. உதவியாளர் உள்ளிட்டோர் அவரது பங்களிப்பைக் கருத்தில் கொண்டு மரியாதை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.செப்டம்பர் 12ஆம் தேதி அமைச்சர் நிர்மல் குமார் அரசு மரியாதை அறிவித்தார். தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்படும். அவரது விருப்பப்படி அடக்கம் செய்யாமல் தகனம் செய்யப்படும்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!