பார்த்தாலே மனசு வலிக்குது... ஒரு மழைக்கே இந்த கதி..! சௌமியா அன்புமணி வேதனை...!
நீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்க்கும்போது மனம் வலிப்பதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. விவசாய நிலங்களில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்டு நெல்மணிகளும் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கும்பகோணத்தில் பெய்த கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. அந்த இடத்தில் பார்வையிடுவதற்காக பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி சென்றிருந்தார். விவசாயிகளிடம் பேசிய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெற்பயிர்களை பார்க்கும்போது மனம் வலிப்பதாகவும், தாங்கள் வரும் வழியில் பாதி இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.
அண்டை மாவட்டங்களில் கூட குருவைப் பயிர்கள் அறுவடை செய்யப்படாமலேயே நீரில் மூழ்கி விட்டதாகவும் தெரிவித்தார். கும்பகோணத்தில் சம்பா பயிர்களும் நீரில் மூழ்கி விட்டதாக தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை, காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு என்பது இருக்க தான் செய்யும் என்றும் காலம் காலமாக இந்த பிரச்சனை இருந்து வருவதாகவும் பயிர்களை காக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: நான் எதிர்பார்க்கவே இல்ல.. ஐயா கொடுத்துட்டாரு…! செயல் தலைவர் பதவி வழங்கியது குறித்து ஸ்ரீகாந்தி கருத்து…!
குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளாமலும், வாய்க்கால்களை தூர்வாராமல் இருந்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த சௌமியா அன்புமணி, பணிகள் நடைபெற்றது போல் பில் மட்டும் இருப்பதாக தெரிவித்தார். பணிகள் செய்யப்பட்டதாக கல் நடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்த அவர், தூர்வாரி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சுத்த வேஸ்ட்...” - கொங்கு மண்டலத்தில் இபிஎஸ் பெயரை டேமேஜ் ஆக்கிய அன்புமணி...!