"தினமும் 2 விவசாயிகள் தற்கொலை"..! பயிர்க்கடன் தள்ளுபடி அவசியம்... சவுமியா அன்புமணி வலியுறுத்தல்..!!
சட்டசபையில் பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி பேசினார்.
சட்டப்பேரவையில் தர்மபுரி பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி உரையாற்றினார். முதலமைச்சரின் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். முதலமைச்சர் விஜய் பல்லாண்டு வாழ வேண்டும் என்ற வாழ்த்துவதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். அத்தனை உயர்த்திய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசியவர் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பு பிரகாசத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஒரு அறையை சிறு ஒளி நிரப்பி விடுவதை போல் ஆளுநர் முறையில் எனது சமூகநீதி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு இருந்தது என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்காக பேசிய சௌமியா அன்புமணி, மழை, வெயில் என எதுவும் பார்க்காமல் வேலை செய்பவர்கள் வேளாண் மக்கள் என்று கூறியுள்ளார். பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதை செலவாக பார்க்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் அன்றாடம் இரண்டு விவசாயிகள் வீதம் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார். மகாராஷ்டிராவை போல தமிழகத்திலும் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டார்.
இதையும் படிங்க: பாமகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! கூட்டணி கட்சிகளின் குடைச்சல் காரணமா?!
கடந்த ஆட்சி தோல்வி அடைய முக்கிய காரணமே பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றம் தான் என்றும் ஆனால் அதே நிலைதான் என்றும் தொடர்கிறது எனவும் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதாக தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பொறுத்தது போதும், பொங்கி எழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெண்கள் மீது கை வைத்தால் சும்மா விடக்கூடாது என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு ஆறுகள் ஓடியும் குடிக்க சுகாதாரமான நீர் இல்லை என்று சௌமியா அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். தர்மபுரி - காவிரி உபரணியர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் பேரவையில் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!