போலீசுக்கு போனா 3 சாவு விழும்.. ரூ.1 கோடி கேட்டு மாஜி அமைச்சருக்கு கொலை மிரட்டல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் எஸ். பி. வேலுமணி. அவரிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை 30-ம் தேதி கோவையில் குண்டு வெடிக்கும் என்றும் காலப்பட்டி கலியபெருமாள் குட்டை குப்பை மேட்டில் ஒரு கோடி ரூபாய் பணப்பையை வைக்க வேண்டும் என்றும் மிரட்டப்பட்டுள்ளது.
இமெயில் ஐடியில் ஒரு ரகசிய குறியீடு வரும் என்றும் அந்த குறியீட்டை பகிர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடிதத்தின் பின்பக்கம் கூகுள் மேப் வரைபடம், drop the bag here என்றும் எழுதப்பட்டுள்ளது. கருப்பு பணம் வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், மே 25ஆம் தேதி ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், காவல்துறைக்கு சென்றால் குடும்பத்தில் மூன்று பேரை, மூன்று மாதங்களில் கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: அண்ணாமலை தலையில் இடியை இறக்கிய நயினார் நாகேந்திரன்... கையறு நிலையில் கதறும் அண்ணனின் விழுதுகள்...!
எனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. ஆவேச பதிலடி கொடுத்த கே.எஸ்.அழகிரி..!