×
 

#BREAKING மீண்டும், மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம் - நடுக்கடலில் தமிழக மீனவர்கள் கைது...!

நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டை பெற்றுக்கொண்டு நூற்றுக்கணக்கான மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தொடர்ச்சியாக ராமேஸ்வரம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையை கைது செய்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் தற்போது ஒரு விசைப்படவையை நான்கு மீனவர்களையும் கைது செய்திருக்கின்றனர். இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக தற்போது இந்த கைது நடவடிக்கையான இந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது ராமேஸ்வரம் மீனவர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி, அவர்களை சுற்றி வளைத்து கைது செய்திருக்கின்றனர். அதோடு மீனவர்களின் விசைப்படகினையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் மன்னார் கடற்படை முகாமில் வைத்து மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் நடுக்கடலில் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

இதையும் படிங்க: “எடப்பாடி பழனிசாமியை விஜய் ஏற்க மாட்டார்” - அதிமுகவை சீண்டி பார்க்கும் பாஜக...!  

இதையும் படிங்க: தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.. என்ன காரணம்..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share