#Breaking அதிகாலையிலேயே அதிர்ச்சி... ஸ்ரீபெரும்புதூரையே அதிர விட்ட துணிகரம்... களமிறங்கிய காவல்துறை...!
ஸ்ரீபெரும்புதூர் அருகே அதிகாலையிலேயே அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே அதிகாலையிலேயே அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் வங்கி ஏடிஎம்மை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுப்பேர் பகுதியில், குன்றத்தூர் செல்லக்கூடிய சாலையில் ஐசிஐசிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அதிகாலை நேரத்தில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது குறித்து தகவல் கிடைத்ததும், சோமங்கலம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, வங்கி மேலாளரிடமும் விசாரணை நடத்தி வரும் போலீசார், கொள்ளை சம்பவம் தொடர்பாக அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தாம்பரம் காவல் ஆணையர் கார்த்திகேயனும் நேரில் சென்று இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை தற்போது போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் முகமூடி அணிந்து வந்தார்களா, எத்தனை பேர் வந்தார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேபோல், ஏடிஎம் மையத்தில் எவ்வளவு பணம் காணாமல் போயுள்ளது என்பதையும் வங்கி மேலாளரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, அதிகாலை வேளையில் இவ்வளவு தைரியமாக வந்து கொள்ளையடித்துச் சென்றது எப்படி என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுவாக ஏடிஎம் மையத்தை உடைத்தால், உடனடியாக அதனுடன் தொடர்புடைய வங்கிக்கு அலாரம் செல்லும். ஆனால், இந்த சம்பவத்தில் அலாரம் ஒலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அலாரத்துடன் இணைக்கப்பட்டிருந்த கேபிளை அறுத்து அல்லது வெட்டிவிட்டு கொள்ளையர்கள் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றினார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்தக் கொள்ளை சம்பவம் இந்த ஒரு ஏடிஎம் மையத்தில் மட்டும்தான் நடைபெற்றுள்ளதா அல்லது அருகில் உள்ள வேறு ஏதேனும் ஏடிஎம் மையங்களிலும் இதுபோன்ற கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.