"சிவன் சொத்து குல நாசம்"..! எத்தனை கோவில் ஏறினாலும் பாவம் தீராது... தவெக விமர்சனம்..!
ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி விவகாரத்தை குறிப்பிட்டு தமிழக வெற்றி கழகம் விமர்சனம் செய்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி வழக்கு தொடர்பாக திமுக பகுதி செயலாளர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து திருச்சி போலசார் அவரை கைது செய்தனர். ரங்கநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான 5.87 நிலத்தை போல ஆவணங்களை வைத்து மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் மற்றும் சார்பதிவாளர் வனிதாவின் முன் ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. முன் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதுடன் அவரை அதிரடியாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவில் நிலத்தில் திமுக கை வைத்ததாக தமிழக வெற்றிக்கழகம் விமர்சனம் செய்துள்ளது. ஸ்ரீரங்கம் கோவில், ரூ.50 கோடி மதிப்பிலான நில விவகாரம் தொடர்பான புகாரில் சிக்கியதாகக் கூறப்படும் திமுக முக்கியப் பிரமுகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திருச்சி மாவட்ட காவல்துறையினரால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டசபையை கட் அடிக்கும் உதயநிதி!! மு.க.ஸ்டாலின் தோற்க இதுதான் காரணம்!! அமைச்சர் ரமேஷ் அதிரடி!
இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "சிவன் சொத்து குல நாசம்" என வீரமாகப் பழமொழி பேசிய யாராக இருந்தாலும் சரி, கோவில் சொத்தை கையாட நினைத்தால் தண்டனை உறுதி என்று தமிழகவற்றைக் கழகம் தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடாது என்றும் இனி எத்தனை கோவில் குளம் ஏறி இறங்கினாலும் பாவம் தீராது எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...!