×
 

ஸ்டாலின் மாடல் இல்ல.. FAILURE மாடல்! மருத்துவருக்கே பாதுகாப்பு இல்ல.. விளாசிய இபிஎஸ்..!

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை மருத்துவராக பணியாற்றும் ரமேஷ்பாபு சின்ன கடை பஜாரில் உள்ள தனது சொந்த கிளினிக்கை மூடிவிட்டு வெளியில் வரும்போது மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் ரமேஷ் பாபுவை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தாக்குதலில் அவரது இடது பக்க வயிறு, தொடை, முதுகு உட்பட 6 இடங்களில் காயம் ஏற்பட்டது. கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டி கணேசனை என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார்.

இதையும் படிங்க: நாளைய தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி... நயினார் நாகேந்திரன் ஆருடம்!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரமேஷ் பாபு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட போதே, அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால், இது ஸ்டாலின் மாடல். அதனால், வழக்கம் போல கடந்து சென்றதன் விளைவே இந்த சம்பவம் என குற்றம்சாட்டினார். அரசு மருத்துவமனையில், அதுவும் மருத்துவருக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை என்று கூறிய அவர், இதற்கு சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கத் திராணியற்ற பொம்மை முதல்வரே பொறுப்பு என்று சாடினார்.

வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி, அவர்களை தெருவில் போராட நிறுத்தியதோடு அல்லாமல், அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைக்கு தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியது தான் ஸ்டாலின் Failure மாடல் சாதனை என்றும் மருத்துவரை தாக்கிய நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: வெளியில் சொல்லாத சீக்ரெட்டும் இருக்கு... விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share