பாகிஸ்தான் மீது பாசம்... இந்தியாவுக்கு சாபம்விட்ட பேராசிரியை... வெளியே தள்ளிய எஸ்.ஆர்.எம்..!
உங்கள் சொந்த இரத்த வெறிக்காகவும், உங்கள் தேர்தல் தந்திரங்களுக்காகவும், அப்பாவி உயிர்களைக் கொல்வது துணிச்சலல்ல, அது நீதியுமல்ல. இது ஒரு கோழைத்தனமான செயல்
உலகின் பல நாடுகள் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐ ஆதரித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அது முக்கியமானது என்று கூறிவருகின்றன். ஆனாலும், பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானை ஆதரிக்கும் சில நாடுகள் உள்ளன. துருக்கியைத் தவிர, அஜர்பைஜானும் பாகிஸ்தானை ஆதரிக்கிறது. இந்தியாவுக்கு வந்த விமானம் அஜர்பைஜானில் மீண்டும் தரையிறங்கியது. இதன் காரணமாக சுமார் 250 பயணிகள் அங்கு சிக்கித் தவித்தனர். அந்த நாடும் அவர்களுடன் ஒத்துழைக்கவில்லை.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு 15 நாட்களுக்குப் பிறகு, இந்திய ஆயுதப் படைகள் செவ்வாய்-புதன்கிழமை நள்ளிரவு பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தன. பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் வான்வெளியை மூடிவிட்டன.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு இதுபோதாது.. உயிரிழந்தவர்களின் மனைவிகள் கோரும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை..!
ஆனால் இங்கே உள்ள சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா மீது வன்மத்தை கக்கும் வாய்வழியை மூடவில்லை. அப்படித்தான் காட்டாங்குளத்தூரில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பேசியாரியர் ஒருவர் இந்தியா மீது வன்மத்தைக் கக்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸில், ''புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தானில் நடந்த தாக்குதலில் இந்தியா ஒரு குழந்தையைக் கொன்றது. இரண்டு பேரைக் காயப்படுத்தியது.
உங்கள் சொந்த இரத்த வெறிக்காகவும், உங்கள் தேர்தல் தந்திரங்களுக்காகவும், அப்பாவி உயிர்களைக் கொல்வது துணிச்சலல்ல, அது நீதியுமல்ல. இது ஒரு கோழைத்தனமான செயல்! என்றும், ''பொருளாதார முடக்கம், லாக்டவுன், மின்சார நிறுத்தம், பாதுகாப்பற்ற சூழல், உணவுப் பற்றாக்குறை, பணவீக்கம், உயிர் இழப்பு... அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் நிலை இப்படித்தான் இருக்கும். பணப் பற்றாக்குறை இருந்தால் கவனமாக இருங்கள். உலகம் நிச்சயமற்ற நிலையில் இருக்கும்போது, எங்களுக்கு முன்கூட்டியே தங்கம் எச்சரிக்கை அறிகுறிகளை அனுப்புங்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் எஸ்.லோரா-வின் இந்த செயல்பாடுகள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ''ஆபரேஷன் சிந்தூர் செயல்பாட்டுக்கு பிறகு பேராசிரியை லோரா இராணுவத்திற்கு எதிரான கதைகளை இடுகையிட்டு வருகிறார். இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?'' என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியை எஸ்.லோராவை இன்று இடைநீக்கம் செய்துள்ளது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு.. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றது அம்பலம்!