×
 

தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி... இதையெல்லாம் செய்யணும் பா.! உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி தலைவராகவும் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆகவும் விளங்கிவரும் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அரசியலைத் தொடர்ந்து நுழையும் முன், உதயநிதி திரைப்படத் துறையில் தனது அடியெடுத்து வைத்தார். 2008இல் அவர் நிறுவிய ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம், தமிழ் சினிமாவின் பல வெற்றிப் படங்களை உருவாக்கியது. 

தற்போது அரசியல் களத்தில் மிகத் தீவிரமாக களமாடி வரும் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணத்தை சுட்டிக்காட்டி பலரும் வாழ்த்து தெரிவித்த வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சரும் உதயநிதி ஸ்டாலினின் தந்தையுமான மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது தனது மகனுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினார். 

கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞரணிச் செயலாளராக, விளையாட்டுத் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: V.P. சிங் போன்ற பிரதமரை மிஸ் பண்றோம்... முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்...!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக உதயநிதி ஸ்டாலினுக்கு தனது அறிவுறுத்தலையும் வழங்கி உள்ளார். காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக,எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்துக்கு ரெட் அலர்ட்... என்ன செய்யலாம்? முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஆலோசனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share