×
 

"சமூக நீதி முன்னோடி"..! அயோத்திதாசர் பிறந்த நாளில் ஸ்டாலின் மரியாதை..!

அயோத்திதாச பண்டிதர் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அயோத்திதாச பண்டிதரின் 181 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது முழு திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். முதல்வர் விஜய் அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மரியாதை செலுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினும் அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

அயோத்திதாச பண்டிதர் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய சீர்திருத்தவாதியாகவும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான முதல் குரல்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறார். தமிழ், சித்த மருத்துவம், பத்திரிகை ஆசிரியர், அரசியல் சிந்தனையாளர் என பன்முகத் திறமைகள் கொண்ட இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். “தமிழன்”, “திராவிடன்” போன்ற அடையாளங்களை வலியுறுத்தி, சாதி பேதமற்ற சமூகத்தை உருவாக்க முயன்ற முன்னோடி அவர். அவரது சிந்தனைகள் பின்னர் திராவிட இயக்கத்துக்கு அடித்தளமிட்டன.

அயோத்திதாச பண்டிதரின் 181ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதரின் சிலைக்கு முதல்வர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ராஜ்மோகன், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் அயோத்திதாச பண்டிதரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: யார் முதல் பெண் அமைச்சர்..? Instagram, வாட்ஸ் அப்பை நம்பாதீங்க..! MP கனிமொழி அறிவுறுத்தல்..!

இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள அயோத்திதாசர் பண்டிதர் திருவருட்சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு திருவருட்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர்கள் திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? விசாரணையை முடுக்கி விட்ட ஸ்டாலின்!! திமுக தீவிரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share