அது மிசா இல்ல... பெண்கள் CASE..!! ஸ்டாலின் கைது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு... திமுகவினர் கொந்தளிப்பு.!!
மிசா, சர்க்காரியா கமிஷன் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேசினார்.
முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டார் என்று திமுகவினர் தொடர்ந்து கோரி வரும் நிலையில் நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய் மிசா என்று கூறுகிறார்கள் எனவும் நிஷா வரலாறு தங்களுக்கும் தெரியும் என்றும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாத முதல்வர் விஜய் சர்க்காரியா கமிஷன் குறித்தும் நேற்று பேசினார்.
முதல்வரின் பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியது குறித்து விளக்கம் கொடுத்தார். விசாரணையோ, நீதிமன்றத்தை பற்றியோ முதலமைச்சர் விஜய் நேற்று பேசவில்லை என்று அமைச்சன் நிர்மல் குமார் தெரிவித்தார் மக்கள் மன்றத்தில் உள்ளவற்றை தான் சுட்டிக்காட்டி முதல்வர் விஜய் நேற்று பேசியதாக கூறினார்.
பேரவையில் உள்ள சர்க்காரியா கமிஷன் குறித்து தான் முதல்வர் விஜய் பேச இருப்பதாக குறிப்பிட்டார். கலைஞர் எங்கெங்கெல்லாம் பணம் வாங்கினார் என்பது ஏற்கனவே சர்க்காரியா கமிஷனில் உள்ளது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்கு கூட இருக்கலாம் என்றும் அது எல்லாம் மிசா ஆகாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கே.என்.நேரு விவகாரம்... இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கம்... ஸ்டாலின் எதிர்ப்பு..!
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்றும் பெண்கள் தொடர்பான வழக்கில் தான் கைது செய்யப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். 21 வது அம்சத் திட்டம் என்று அம்மையார் இந்திரா காந்தி குறித்து மோசமாக பேசியதால்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார் ஸ்டாலின் கைது குறித்து அமைச்சர்கள் குமாரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதையும் படிங்க: இனி Z+ இல்ல..!! ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு..! காவல் நிலையத்தில் புதிய மாற்றம்..!!