×
 

ஸ்டாலின் கனவு உலகத்தில் இருக்கிறார்! கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி!

கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடுமையாகச் சாடியுள்ளார். கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் நிர்வாகத் தோல்விகள் குறித்து அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். அவர் கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மகனும் மருமகனும் மட்டுமே அவருக்கு உலகமாகிவிட்டனர்; மக்களுடனானத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு அவர் வாழ்கிறார். தமிழகத்தில் தினமும் கொலையும் கொள்ளையும் போதைப்பொருள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவை வடக்கு தொகுதியில் போட்டியா..?? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வானதி சீனிவாசன்..!!

திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் போன்றத் தொழில் நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஏற்றுமதி தொடர்பானப் பிரச்சினைகளில் நாங்கள் மத்திய அரசை அணுகியபோது, பிரதமர் மோடி அவர்கள் உடனடித் தீர்வு கண்டு பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளார். ஆனால், மாநில அரசு மின்சாரக் கட்டணம் மற்றும் சொத்து வரியை உயர்த்தித் தொழில்துறையை முடக்கி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் மக்கள் செலுத்தும் வரிப் பணம் எங்கே போகிறது? அடிப்படைத் தேவையானச் சாலை வசதிகள் இல்லை, குப்பைகளை அகற்றக் கூட ஆள் இல்லை என்கிறார்கள். மாநில அரசின் நிதி எங்கே என்று கேட்கும் முதலமைச்சர், இங்கிருந்துப் பெறும் வரிப்பணத்தை எதற்காகச் செலவிடுகிறார்? என வினவினார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நேர்மையான ஆட்சி நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் டாஸ்மாக் முதல் அரசு ஒப்பந்தங்கள் வரை அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. அமைச்சர்கள் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். திமுக அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்த ஒரு அரசு என சீறினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனைத்துக் கட்சிகளும் இணைந்த பிறகு, மதுராந்தகத்தில் பிரதமர் மோடிக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்துத் திமுகவிற்குப் பதற்றமும் நடுக்கமும் வந்துவிட்டது. எங்களின் ஒரே கனவு இந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதுதான் என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அமித்ஷாவை கண்டாலே ஸ்டாலினுக்கு நடுக்கம்! "முதல்வரை விமர்சித்த வானதி சீனிவாசன்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share