×
 

மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி..! ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மரியாதை!

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாட்டின் அரசியல், இலக்கியம் மற்றும் சமூக நீதி வரலாற்றில் இன்று ஒரு முக்கிய நாளாகப் பதிவாகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 1924 ஜூன் 3 அன்று திருகுவளை எனும் சிற்றூரில் பிறந்த கலைஞர், தமிழ் சினிமா உலகில் இருந்து அரசியல் களத்திற்கு வந்தார்.

திராவிட இயக்கத்தின் முன்னோடியாகவும், தமிழ்நாட்டின் நவீன சிற்பியாகவும் உருவெடுத்தவர். அவரது நினைவு தமிழக அரசியலில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த பிறந்தநாள் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அன்பகம் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

குறிப்பாக, தேனாம்பேட்டை அன்பகத்தில் 75 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடி ஏற்றப்பட்டு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகிய மூவரின் சிலைகளும் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வு திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது. 

இதையும் படிங்க: கல்யாண வீட்டுல கூட கதறல் தான்..! 100 யூனிட் ஜெ. மேடம் குடுத்தது... திமுகவை பந்தாடிய முதல்வர் விஜய்..!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும், டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, நேரு உட்பட ஏராளமானோர் கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினர். 

இதையும் படிங்க: பொதுச்செயலாளர் பதவி வேண்டாம்! துரைமுருகன் திடீர் ட்விஸ்ட்! திமுகவில் அடுத்த பூகம்பம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share