×
 

#BREAKING: ஆட்சி அமைக்கிறது தவெக..! புதிய அரசுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..!

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஒரு புதிய அரசியல் அலையை உருவாக்கியது. முதல் முறையாகத் தேர்தலை எதிர்கொண்ட இந்தக் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக மற்றும் அதிமுக போன்ற நீண்டகால அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளிய இந்த வெற்றி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தவெகவுக்கு 108 இடங்களுடன் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தப் பற்றாக்குறை தவெகவை கூட்டணி அரசியலின் பக்கம் தள்ளியது. காங்கிரஸ் கட்சி திமுகவில் இருந்து தமிழக வெற்றி கழக கூட்டணிக்கு சென்றது. ஆனால் கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனை ஏற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அமையவருக்கும் புதிய அரசுக்கு வாழ்த்துக்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து நலத்திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மை தொடரும் என்றும் மாநிலம் வளரும் எனவும் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டை வளப்படுத்தி இருப்பதாகவும் அனைத்து துறைகளையும் வளர்த்தெடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில் மாற்று யோசனை பலர் கூறியதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BIG BREAKING: முதல்வராகிறார் விஜய்..! கிரீன் சிக்னல் காட்டிய திருமா..! விசிக ஆதரவு கடிதத்தை பெற்ற ஆதவ்..!

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நன்றி தெரிவிக்க கூட அறிவாலயம் வரவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டை வளர்த்தெடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "என் தளபதிக்காக"..! திருப்பதி மலையில் தவழ்ந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்திய மாற்றுத் திறனாளி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share