மாநில கல்விக் கொள்கை சொல்வது என்ன? முக்கிய அம்சங்களின் முழு விவரம்...
தமிழ்நாட்டின் மாநில கல்விக் கொள்கையில் முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ எதிர்த்து, மாநிலத்தின் கலாச்சார, வரலாற்று மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முடிவு செய்தது.
இதற்காக, 2021-ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு, தமிழ்நாட்டிற்கு பிரத்யேகமான கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தது.
இந்தக் குழு பரிந்துரையின் பெயரில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட மாநில பள்ளி கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பான விவரங்களை பார்க்கலாம்.
இதையும் படிங்க: அனைவருக்குமான கல்வி தான் மாநில கல்விக் கொள்கை.. அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தெளிவான விளக்கம்..!
பள்ளிக் கல்வியில் தமிழ் மொழியே முதல் மொழியாக இருக்க வேண்டும் என்றும் தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் வழி கல்வியை வழங்குதல் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டும் என்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ் போலவே ஸ்போக்கன் தமிழ் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3, 5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் இருக்கக் கூடாது என்றும் நீட் தேர்வு இருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.
நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
கல்வி, மாநிலப் பட்டியலில் வர வேண்டும், சி.பி.எஸ்.இ மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான கட்டணங்களை சீரமைக்க குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
தனியார் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் போன்றவற்றை கண்காணிக்க விரிவான ஒழுங்குமுறை உருவாக்க வேண்டும் என கூறி உள்ளது.
5 வயது பூர்த்தியான குழந்தைகள் 1-ஆம் வகுப்பில் சேரலாம் என்றும் இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..!