×
 

விவசாயி மீது பொய்புகார் போட்டு சித்ரவதை செய்த சப்-இன்ஸ்பெக்டர்.. மனித உரிமை ஆணையம் அதிரடி நடவடிக்கை..

விவசாயி மீது பொய் புகார் பதிவு செய்து அவரை காவல் நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்த காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி  காஸ்பர் வில்லியம், இவர் தனது தோட்டத்தில் மாட்டு தீவன பயிர் பயிரிட்டிருந்தார். காற்றாலை அமைப்பதற்காக, காஸ்பரின் தோட்டத்தில் போடப்பட்டிருந்த பயிர்களை சிலர் அழித்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, கடந்த 2018 ம் ஆண்டு சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, பின்னர் கங்கை கொண்டான் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். அதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, சீவலப்பேரி காவல் உதவி ஆய்வாளர் சுதன், மீது புகாரை விசாரிக்கவில்லை என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதையறிந்த உதவி ஆய்வாளர் சுதன், விவசாயி காஸ்பர் மீது பொய் வழக்கு பதிவு செய்து, காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். தன்னை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் சுதன், காவலர் மணிக்குட்டி மீது நடவடிக்கை எடுக்க கோரி  மாநில மனித உரிமை ஆணையத்தில் காஸ்பர் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: இதனால்தான் என்னை மாணவிகள் அப்பா, அப்பா என்று அழைக்கிறார்கள்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி..!

இந்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், காவல் நிலையத்தில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் சுதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயி காஸ்பர் வில்லியமுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம், அந்த தொகையை காவல் உதவி ஆய்வாளர் சுதனிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட்டது.
 

இதையும் படிங்க: தண்ணியில எச்சில் துப்பி குடிக்க வச்சாங்க!! கேரளாவில் தலைவிரித்தாடும் ராகிங் கொடுமை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share