8 வாரம் தான் டைம்... அதுக்குள்ள செஞ்சி முடிக்கணும்! தெரு நாய் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கூடுதல் உத்தரவு...!
தெரு நாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கூடுதல் உத்தரவை பிறப்பித்துள்ளது..
டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்தது. தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்கும் நடவடிக்கைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த புதிய உத்தரவை பிறப்பித்தது.
தெரு நாய்களுக்கு பொதுவெளியில் உணவளிக்கக்கூடாது என்றும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் உணவளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. தெருநாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. தெருக்களில் திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதியில் விடலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்கும் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் திரும்பப் பெறப்பட்டது. இதன்பிறகு தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தெரு நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூடுதல் உத்தரவை பிறப்பித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றி தெரியும் தெரு நாய்களைப் பிடித்து காப்பகத்தில் விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய் கடி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு நடத்திய விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் நாய் குறித்து புகார் அளிப்பதற்கு அவசர கால எண்ணெய் வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை ரேஸ் கோர்ஸ் கிளப் வழக்கு... தனி நீதிபதி உத்தரவுக்கு தடை! தமிழக அரசுக்கு கிரீன் சிக்னல்...!
தெரு நாய்களால் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்கும் வகையில் அவசரகால எண் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி, சுகாதார நிறுவனங்களில் தெருநாய்கள் நுழையாமல் வேலி அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலைகள் அமைக்கும் பணிகள் எட்டு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்ன ஆதாரம் இருக்கு? அண்ணாமலை கிட்ட விசாரிக்கணும்! உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…!