×
 

பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்! உதயநிதி கைது குறித்து அமைச்சர் அருண் ராஜ் விளக்கம்!

பெண்களைப் பற்றி தவறாகப் பேசுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் குறித்தும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் குறித்தும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மிகக் கடுமையான எச்சரிக்கைகளைப் பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய அமைச்சர், பொதுவாகப் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுவதே மாபெரும் தவறுதான்; இதில் குறிப்பிட்ட ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுத்தான் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசியல் மேடைகளில் இனிமேல் எந்தவொரு தலைவரோ அல்லது பேச்சாளரோ பெண்கள் குறித்துத் தவறான கருத்துக்களை முன்வைக்கக் கூடாது என்பதற்காகவே தற்போதைய இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

மேலும், பெண்களை இழிவாகப் பேசக்கூடிய எந்தவொரு நபருக்கும் இதுவொரு நேரடியான எச்சரிக்கை. இந்த அரசு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டும் வகையில், பாரபட்சம் ஏதுமின்றி யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று ஆளுங்கட்சியின் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாக அவர் தெளிவுபடுத்தினார்.

இதையும் படிங்க: ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்! தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் கைதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். எதிர்க்கட்சித் தலைவர் கைதைக் கண்டித்துத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள், பொதுச் சொத்துக்களுக்குப் பெரும் சேதம் விளைவித்துள்ளனர். மேலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் வன்முறையாகச் செயல்பட்டுள்ளனர். இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது, அந்தந்த குற்றங்களுக்குப் பொருந்தக்கூடிய சட்டப் பிரிவுகளின் கீழ் பாரபட்சமின்றி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சட்டரீதியான நடவடிக்கைகள் பாயும், என அமைச்சர் தனது செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: நாளை சட்டமன்றம் கூடும் சூழலில் கைது தேவையா? ஆளுங்கட்சிக்கு திருமாவளவன் அறிவுரை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share