மருந்துக் கடைகள் Strike… நோயாளிகள் கவலை வேண்டாம்... சிறப்பு ஏற்பாடு!
மருந்து வணிகர்கள் சங்கத்தினர் நாளை ஒருநாள் கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.
அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை நாடு தழுவிய அளவில் ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனை, அதிக தள்ளுபடிகள், சட்டவிரோத e-பார்மசி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் என தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நோயாளிகளுக்கு அவசர மருந்துகள் கிடைப்பதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மருந்து கடைகளில் அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் போதுமான இருப்பை உறுதி செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட அளவில் உதவி மேசைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் புகார்கள் மற்றும் அவசரத் தேவைகளை உடனடியாக தீர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் 69 மருந்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு..!! நாடு முழுவதும் வரும் 20ம் தேதி மருந்தகங்கள் வேலை நிறுத்தம்..!!
இவர்களின் பெயர், பகுதி மற்றும் தொடர்பு எண்களை உள்ளடக்கிய விவரங்கள் மாவட்ட உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவசர மருந்து தேவை ஏற்படும் பொதுமக்கள் இந்த ஆய்வாளர்களை நேரடியாக அணுகலாம். மருத்துவமனை இணைப்பு மருந்து கடைகள், அவசர சேவைகள் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய மருந்துகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு..!! நாடு முழுவதும் வரும் 20ம் தேதி மருந்தகங்கள் வேலை நிறுத்தம்..!!