அமுதன் கொலைக்கு போதைப் பொருள் காரணமா.? நடந்தது என்ன.? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!
மாணவர் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் கொடுத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் சென்னையில் அமைந்துள்ள சட்டமன்றப் பேரவையில் உறுப்பினர்கள் கூடினர். இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. அன்று தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.
அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல நாட்கள் பொது விவாதங்கள் நடைபெற்றன. சுதந்திர தின விடுமுறைக்குப் பிறகு இன்று முதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்கியுள்ளன.
பேரவை விவாதத்தின் போது, கோவை மாணவர் கொலை விவகாரம் அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். மாணவர் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்டார் என்றும் மயக்க நிலையில் இருந்த அமுதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் தெரிவித்தார். அமுதன் கொலை வழக்கு குறித்து போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். கோவை மாணவர் கொலையில் இதுவரை 15 பேர் கைது. இரு குழுக்கள் இடையேயான மோதலில் மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டதாகவும் போதைப் பொருள் தொடர்பான வழக்கு அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் மேகமலை விவகாரம்..! தவிக்கும் மக்கள்... சட்டப்பேரவையில் விவாதம்.!!
உண்மையை மறைக்க வேண்டிய தேவை காவல்துறைக்கோ, அரசுக்கோ இல்லை என்றும் போதைப் பொருள் குறித்து புகார் அளித்ததால் கொலை என்பது தவறு எனவும் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறினார். மாணவர் அமுதன் கொலை விவகாரத்தில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: அது என்ன பவுடர்..? திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்றீர்களா..? திமுக - தவெக காரசார விவாதம்..!!