×
 

ராகிங் புகார் கொடுத்ததால் மாணவியை தாக்கிய கொடூரம்..! மாணவனை அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

திருச்சியில் ராகிங் புகார் கொடுத்த மாணவியை தாக்கிய இரண்டாம் ஆண்டு மாணவன் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி அரசு கல்லூரியில் பயிலும் மாணவன் ஒருவன் ரேக்கிங் செய்ததாக அதே கல்லூரியில் பயிலும் மாணவி புகார் அளித்ததால் அதே கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவன் கடும் தாக்குதல் நடத்தினார். ஓங்கி அறைந்ததில் அந்தப் பெண் மயக்கம் அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் மாணவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு இந்தியாவிலேயே ராகிங்கை முற்றிலும் தடை செய்த முதல் மாநிலங்களில் ஒன்றாகும். 1997-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு ராகிங் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் அன்று முதல் இன்று வரை தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் செயல்பாடுகளை கடுமையாக தடை செய்து வருகிறது.

இச்சட்டத்தின்படி, கல்வி நிறுவனத்திற்குள் அல்லது வெளியே ராகிங் செய்வது, அதில் பங்கேற்பது, ஊக்குவிப்பது அல்லது தூண்டுவது ஆகியவை குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ராகிங் என்றால் புதிய மாணவர்களை வார்த்தைகள், செயல்கள் அல்லது நடத்தை மூலம் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ துன்புறுத்துவது, அவமானப்படுத்துவது, பயமுறுத்துவது என வரையறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராகிங் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..! என் மேலேயே COMPLAINT குடுப்பியா?.. ஓங்கி அடித்ததில் மயங்கி விழுந்த மாணவி..!!

இந்த நிலையில், ராகிங் புகாரளித்த மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி அருகே துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட மாணவன் மீது மாணவி ஒருவர் புகார் அளித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கல்லூரியில் பயிலும் வரலாற்று பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவன் கிருபாகரன் என்பவர் மாணவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.

புகார் அளித்த மாணவி அவருடன் நடந்து வந்த மாணவன் மீது கிருபாகரன் கடுமையாக தாக்குதல் நடத்தி இருக்கிறார். மாணவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரலானது. இந்த நிலையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவன் கைது செய்யப்பட்டார். மாணவன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

 

இதையும் படிங்க: மாணவி கொடூரக் கொலை சம்பவம்... குற்றவாளி சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share