விழுப்புரத்தில் சோகம்! வகுப்பறையில் துடித்து துடித்து உயிரிழந்த மாணவன்! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்
விழுப்புரத்தில் பள்ளி வகுப்பறையில் மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையில் மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.
விழுப்புரம் மாவட்டம் திரு வி கா வீதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மோகன்ராஜ் என்ற மாணவர் ஒன்பதாம் வகுப்பு பயன்று வந்தார்.
இந்த நிலையில் திடீரென வகுப்பறையில் மாணவன் மோகன்ராஜ் மயங்கி விழுந்து உள்ளார். இதனைப் பார்த்து ஓடிச் சென்று ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மோகன்ராஜ்க்கு என்ன ஆனது என பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: அஜித் கஸ்டடி மரணம்.. வீரியமெடுக்கும் சிபிஐ விசாரணை! மருத்துவமனையில் முகாமிட்ட அதிகாரிகள்..!
தொடர்ந்து மாணவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் ஏன் மயங்கி விழுந்தான், அவன் ஏற்கனவே ஏதேனும் உடல்நலப் பிரச்சனையுடன் இருந்தானா போன்ற விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எந்த நிலையில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர் மோகன்ராஜ் திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த சக மாணவர்கள் உடனடியாக ஓடி சென்று என்ன ஆனது என பார்த்து ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும் மயங்கி விழுந்த மாணவனுக்கு தண்ணீர் கொடுக்க முற்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சமூக நீதி பற்றி திமுக பேசலாமா? வன்னியர்களுக்கு துரோகம் செஞ்சுட்டாங்க! அன்புமணி ஆவேசம்…