×
 

காதலிக்க மறுத்த மாணவியை கொன்ற முனியராஜ்... பாய்ந்தது குண்டாஸ்.. அதிரடி நடவடிக்கை...!

ராமநாதபுரத்தில் மாணவி ஷாலினி காதலிக்க மறுத்ததால் கொலை செய்த முனியராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஷாலினி என்ற 12 ஆம் வகுப்பு மாணவி அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளார். அவரை சேரல் கோட்டையைச் சேர்ந்த முனியராஜ் என்பவன் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் வழிமறித்து தன்னை காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார் முனியராஜ். அவரின் காதலை ஏற்க மாணவர் ஷாலினி மறுத்ததாக தெரிகிறது. மாணவியை தொடர்ந்து காதல் தொந்தரவு கொடுத்து வந்த முனியராஜ் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி ஷாலினியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் மாணவியை கத்தியால் குத்திய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் சோதித்து பார்த்து ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: 10 ஆண்டு கால சட்டப்போராட்டம்: 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை... கோவிலுக்குள் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

காதலிக்க மறுத்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி கொன்ற முனியராஜ் என்பவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலிக்க மறுத்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாணவியை கொலை செய்த முனியராஜை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது போன்ற கொடூர செயலில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது. 

இதையும் படிங்க: துடிக்க துடிக்க மனைவி கொலை.. சடலத்துடன் WhatsApp Status வைத்த கணவன்..!! கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share