×
 

கணியாமூர் பள்ளி கலவர வழக்கு.. ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக 600க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள கனியாமூரில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு மீறி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 600க்கும் மேற்பட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் நீதிமன்றம் நிரம்பி வழிந்தது. எனவே பாதுகாப்பு கருதி நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: போர் நிறுத்தம் வருமா? உக்ரைன் - ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை.. ஜெலான்ஸ்கி ஆஜர்.. புடின் ஆப்சென்ட்..!

இதையும் படிங்க: நாட்டுத்துப்பாக்கியை தூக்கிக் காட்டி ஆட்டம் காட்டிய ரவுடி - துப்பாக்கியால் பாடம் புகட்டிய போலீஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share